/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணவன் - மனைவி கோர்ட்டில் தகராறு
/
கணவன் - மனைவி கோர்ட்டில் தகராறு
ADDED : ஆக 18, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை முதன்மை குடும்ப நீதிமன்றத்தில், கோவையை சேர்ந்த கணவன் - மனைவி விவாகரத்து வழக்கு, விசாரணை நடந்து வருகிறது.
விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு குழந்தைகளுடன் மனைவி கோர்ட்டுக்கு வந்தார். அப்போது, கணவர் குழந்தைகளை அழைத்து, கோர்ட் வராண்டாவில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோர்ட் வளாகத்திற்கு வெளியே சென்றார். இதை பார்த்து மனைவி கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டார். பின், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.