/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிவிஷன் போட்டியில் ஆறு விக்கெட் வீழ்த்திய ஹூசேபா
/
டிவிஷன் போட்டியில் ஆறு விக்கெட் வீழ்த்திய ஹூசேபா
ADDED : ஏப் 15, 2025 11:27 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஒன்றாவது டிவிஷன் போட்டி, எஸ்.என்.எம்.வி., மைதானத்தில் நடக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியும், எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட்அணி, 44.3 ஓவரில், 182 ரன்கள் எடுத்தது. அணி வீரர்கள் பிரசன்னா, 45 ரன்களும், செந்தில்குமார், 42 ரன்களும் அதிகபட்சம் எடுத்தனர். எதிரணி வீரர் ஹூசேபா எம் படேல் ஆறு விக்கெட்களும், ரிஹான் அலி மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய, எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட் கிரிக்கெட் கிளப் அணியினர், 39.4 ஓவரில், 140 ரன்கள் எடுத்தனர்.
அணி வீரர்கள் ரிஹான் அலி, 30 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் கவுதம்ராஜ் மூன்று விக்கெட்களும் வீழ்த்தினார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

