/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐதராபாத் - கொல்லம் ரயில் வரும் அக்., வரை நீட்டிப்பு
/
ஐதராபாத் - கொல்லம் ரயில் வரும் அக்., வரை நீட்டிப்பு
ஐதராபாத் - கொல்லம் ரயில் வரும் அக்., வரை நீட்டிப்பு
ஐதராபாத் - கொல்லம் ரயில் வரும் அக்., வரை நீட்டிப்பு
ADDED : ஆக 14, 2025 10:11 AM
கோவை: போத்தனுார் வழியாக, ஐதராபாத் - கொல்லம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஐதராபாத் - கொல்லம் - ஐதராபாத்(07193/07194) வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில், ஐதராபாத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 11:10 மணிக்கு புறப்பட்டு, திங்கள் காலை 7:10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம் - ஐதராபாத் சிறப்பு வாராந்திர ரயில், திங்கள் காலை 10:45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய் மாலை 5:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.
இவ்விரு ரயில்களின் சேவை, முறையே வரும் அக்., 10 மற்றும் அக்., 13ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
சிறப்பு ரயில்களில் ஏ.சி., முதல் வகுப்பு ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, பொது இரண்டாம் வகுப்பு ஆகிய பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
செகந்திராபாத், நலகொண்டா, நாடிகுடே, பிடுகுருலா, குண்டூர், தெனாலி, நெல்லுார், கூடுர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாசேரி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
ஐதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில், போத்தனுாரில் இரவு 10:13 மணிக்கு வந்து 10:15 மணிக்கு புறப்படும். கொல்லம் - ஐதராபாத் சிறப்பு ரயில், மாலை 6:20 மணிக்கு வந்து,6:22 மணிக்கு புறப்படும்.