UPDATED : ஜூலை 04, 2026 03:12 PM
ADDED : ஜூலை 04, 2026 03:00 PM

கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் காலை, மாலை நேரங்களில் ஓட்டம், நடைபயிற்சி, ஜிம் உள்ளிட்ட பயிற்சிகளை நுாற்றுக்கணக்கானோர் செய்கின்றனர். இந்நிலையில், காலை நேரத்தில் ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் நீர்ச்சத்து தேவையை பூர்த்திசெய்ய 'பிரீ ரன்னர்ஸ் கிளப்' சார்பில் முதலாவது 'ஹைட்ரேஷன் பாயின்ட்' ,ஜிம்சன் ரோலக்ஸ் எதிரே அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் பார்க் இன் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் கோவை ரமேஷ், ஹைட்ரேஷன் பாயின்ட்டை காலை 6:15 மணிக்கு துவக்கி வைத்து, ஓட்டப்பயிற்சி செய்தவர்களுக்கு குடிநீர், நீர்ச்சத்து நிறைந்த உணவு, வாழைப்பழம், கடலை மிட்டாய் உள்ளிட்ட ஆரோக்கிய உணவு வழங்கினார்.
இந்த ஆரோக்கிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 150 பேருக்கு வழங்கப்பட்டது. படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
பிரீ ரன்னர்ஸ் கிளப் தலைவர் நாகராஜ், செயலாளர் பாபு, உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
