/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பயணிகளிடம் துாய்மை விழிப்புணர்வு
/
ரயில்வே பயணிகளிடம் துாய்மை விழிப்புணர்வு
ADDED : செப் 19, 2025 08:47 PM

கோவை; 'ஸ்வட்ச் பாரத் அபியான்' திட்டம் சார்பில், ரயில்வே அசோசியேஷன், குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கோவை சி.எஸ்.டபிள்யூ பவுண்டேஷன் சார்பில், கோவை ரயில்வே ஸ்டேஷனில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ர யில்வே துணை வணிக மேலாளர் சதீஷ் கூறுகையில், ''ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் வீதி நாடகம் நடத்தப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வீதி நாடகம், வாக்கத்தான் நடத்தப்பட்டது. 'ரெயில் ஒன் ஆப்' பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,'' என்றார் .
ஸ்டேஷன் இயக்குனர் சச்சின்குமார், சி.எஸ்.டபிள்யூ., பவுண்டேஷன் இயக்குனர் பாசில், குமரகுரு கல்லுாரி பேராசிரியை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.