தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயிலில் முன்பதிவு செய்ய வந்தாச்சு 'ரயில் ஒன்' செயலி

 ரயிலில் முன்பதிவு செய்ய வந்தாச்சு 'ரயில் ஒன்' செயலி

 ரயிலில் முன்பதிவு செய்ய வந்தாச்சு 'ரயில் ஒன்' செயலி


ADDED : மார் 05, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: ரயில் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு இனி ரயில் ஒன் செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும். கடந்த 1ம் தேதி முதல் யு.டி.எஸ்., செயலியின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

ஏற்கனவே யு.டி.எஸ்., செயலியைப் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்கள் ரயில் ஒன் சேவையைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.

யு.டி.எஸ்., செயலியில் பணம் வைத்திருந்தால் அதனை, ரயில் ஒன் செயலிக்கு மாற்றிக் கொள்ள முடியும். ரயில் ஒன் செயலியில், ரிசர்வ் டிக்கெட், அன் ரிசர்வ்டு டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.

யு.பி.ஐ.கார்டு, வாலெட், நெட் பேங்கிங் என அனைத்து வித பரிவர்த்தனைகளையும் எளிதில் செய்ய முடியும். முன்பதிவில்லாத டிக்கெட்களுக்கு 3 சதவீத தள்ளுபடி உண்டு. ரயிலின் தற்போதைய நிலை, தாமதம், எங்கு இருக்கிறது, பி.என்.ஆர்., நிலை உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும்.

பொதுமக்கள் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதன் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு, பிளாட்பார்ம் டிக்கெட் பெறுவதற்காக ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் காத்திருப்பது தவிர்க்கப்படும். அதனால், ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us