/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐ பவுண்டேஷன்' மருத்துவமனை புதிய கட்டடம் நாளை திறப்பு
/
'ஐ பவுண்டேஷன்' மருத்துவமனை புதிய கட்டடம் நாளை திறப்பு
'ஐ பவுண்டேஷன்' மருத்துவமனை புதிய கட்டடம் நாளை திறப்பு
'ஐ பவுண்டேஷன்' மருத்துவமனை புதிய கட்டடம் நாளை திறப்பு
ADDED : டிச 28, 2024 12:31 AM
கோவை; கோவையில், தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவனையின் புதிய கட்டட திறப்பு விழா, நாளை நடக்கிறது.
இது குறித்து, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையை தலைமையிடமாகக் கொண்டு, ஆர்.எஸ்.புரத்தில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை, கண் மருத்துவத்தில் சிறந்த சேவை செய்து வருகிறது.இதன் புதிய கட்டடம் நாளை (ஞாயிறு) மாலை, 4:00 மணிக்கு திறக்கப்படுகிறது.
இந்த புதிய கட்டடம், 1.20 லட்சம் சதுர அடியில் விரிவாக்கப்பட்ட வளாகமாகும். உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை, குறைந்த கட்டணத்தில் வழங்குவதே எங்கள் லட்சியம். 130 க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள், 250 அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட் மற்றும் 1500க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு, மருத்துவமனை செயல்படுகிறது. அதிநவீன கண் மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மையத்தில், அனைத்து விதமான கண் நோய்களுக்கும் சிகிச்சை வழங்கும் வசதி உள்ளது.
40 ஆலோசனை அறைகள், 60 ஆப்டோமெட்ரி அறைகள், 10 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள், 15 கண் மருத்துவ ஆய்வகம் மற்றும் நோய் கண்டறியும் அறைகள், 40 உள் நோயாளிகள் தங்கும் அறைகள், பகல் நேர ஓய்வெடுக்கும் அறைகள், நான்கு கண்ணாடியகம் மற்றும் மருந்தகம், 110 கார் பார்க்கிங் வசதி என, பல வசதிகள் உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

