/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் புகாரை விசாரிக்க ஐ.சி.சி., குழு கட்டாயம்; நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை எச்சரிக்கை
/
பாலியல் புகாரை விசாரிக்க ஐ.சி.சி., குழு கட்டாயம்; நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை எச்சரிக்கை
பாலியல் புகாரை விசாரிக்க ஐ.சி.சி., குழு கட்டாயம்; நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை எச்சரிக்கை
பாலியல் புகாரை விசாரிக்க ஐ.சி.சி., குழு கட்டாயம்; நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை எச்சரிக்கை
ADDED : நவ 19, 2024 11:49 PM

கோவை; பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில், பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க, உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தொழிலாளர் நல உதவி கமிஷனர் காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில், கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் தமிழ்ப்பெயர் பலகை மற்றும் இருக்கை வசதி குறித்து சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 22 நிறுவனங்கள் மற்றும் இருக்கை வசதி செய்யப்படாத 11 நிறுவனங்களுக்கு, விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பத்து மற்றும் அதற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் 2013ன் படி, உள்ளக புகார்க் குழு (ஐ.சி.சி.,) அமைக்கப்பட வேண்டும்.
பணியாளர்களில் இருந்து உயர்மட்டத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு பெண் தலைமை அதிகாரி, பெண்கள் நலனுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் அல்லது சமூகப் பணியில் அனுபவம் உள்ளவர்கள் அல்லது சட்ட அறிவு உள்ள ஊழியர்களில் இருவருக்குக் குறையாத உறுப்பினர்கள், பெண்கள் அல்லது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்னைகளை நன்கு அறிந்த ஒரு நபர் அல்லது அரசு சாரா நிறுவனங்கள் அல்லது சங்கங்களில் இருந்து ஓர் உறுப்பினர். ஆகியோரை உள்ளடக்கியதாக இக்குழு இருக்க வேண்டும்.
இக்குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இக்குழு அமைக்கப்படவில்லை என ஆய்வின்போது கண்டறியப்பட்டால், மாவட்ட கலெக்டரால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, உள்ளக புகார் குழு (ஐ.சி.சி.,) அமைத்து, அந்த விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பி, நகலை, Womenwelfare2013@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ெளிமாநில தொழிலாளர்
அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை labour.tn.gov.in.ism என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், வங்கிக் கணக்கு, வேலை வழங்குநர் விவரம், புலம்பெயர் தொழிலாளியின் சொந்த ஊர் முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை எக்ஸல் படிவத்தில் நிரப்பி, ismcoimbatore@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ் வழிப் பயிற்சி
அனைத்துக் கடைகள் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, தமிழ் மொழி பயிற்சி இணையவழியாக அளிக்கப்படுகிறது. இதற்காக, புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள், ismcoimbatore@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, நிறுவனப் பெயர், மாவட்டம், மின்னஞ்சல், தொலைபேசி எண், பணியாளரின் சொந்த மாநிலம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.