/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.சி.எப்., புதிய நிர்வாகிகள் தேர்வு
/
ஐ.சி.எப்., புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 30, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : இந்திய பருத்திக் கூட்டமைப்பின், 45வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், கோவை, ஜி.கே.எஸ்., காட்டன் சேம்பரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 2024-25ம் ஆண்டுக்கான தலைவராக, துளசிதரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக நடராஜ், ஆதித்ய கிருஷ்ணா பதி, செயலாளராக நிஷாந்த் ஆஷர், இணைச் செயலாளராக சேட்டன் ஜோஷி ஆகியோர், மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, நடப்பாண்டின் பருத்தி வரவின் போக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

