/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது
/
‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது
‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது
‛ஐகான் ஆப் கேன்சர் கேர்- 2025 நால்வரின் பங்களிப்புக்கு விருது
ADDED : ஆக 25, 2025 10:09 PM

கோவை; கோவை பி.எஸ்.ஜி. ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தின் ஐந்தாம் ஆண்டு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.
மையத்தின் இயக்குனர் பாலாஜி வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், பி.எஸ்.ஜி. சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் ஆகியோர் பேசினர்.
புதிதாக இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவில், புற்றுநோய் பராமரிப்பு துறையில் முன்னோடி பங்களிப்புகளை மேற்கொண்ட சிறந்த மருத்துவ வல்லுனர்களுக்கு, 'ஐகான் ஆப் கேன்சர் கேர்' விருது வழங்கப்பட்டது.
கோல்கட்டா டாடா மெடிக்கல் சென்டர் முன்னாள் இயக்குனரான, பத்மஸ்ரீ டாக்டர் மாம்மன் சன்னி, பெங்களூரு யெனபோயா பல்கலை துணைவேந்தர் விஜயகுமார், மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனை இயக்குனர் ப்ரமேஷ், அசாம் சில்சார் காசார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனரான பத்மஸ்ரீ ரவி கண்ணன் ஆகியோருக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி முதல்வர் சுப்பா ராவ் நன்றி கூறினார்.