/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்முனைவோர் ஆக மாணவர்களுக்கு ஐடியா
/
தொழில்முனைவோர் ஆக மாணவர்களுக்கு ஐடியா
ADDED : ஆக 23, 2025 02:48 AM

கோவை: உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'ஒரு தொழில்முனைவோராக மாறுவது எப்படி?' என்ற தலைப்பில், ஒரு நாள் பயிலரங்கு நடந்தது.
'தொழில்முனைவோர் என்றால் என்ன' என்ற கேள்வியில் துவங்கி, மாணவர்கள் ஆழமான மற்றும் எளிமையான கேள்விகளுக்கு தலைமை விருந்தினராக பங்கேற்ற, பேராசிரியர் மணிகண்டன் விளக்கினார்.
ஒரு தொழிலை எப்படி துவங்குவது, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல், திட்டமிடுவது, முதலீடுகளை எப்படி பெறுவது, அரசாங்கத்தின் உதவும் திட்டங்கள் என்ன என்பன போன்ற பல விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லுாரிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.