/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐடியா ஹாக்கத்தான் 4.0-' அசத்திய மாணவர்கள்
/
'ஐடியா ஹாக்கத்தான் 4.0-' அசத்திய மாணவர்கள்
ADDED : ஜூலை 02, 2025 09:51 PM
பொள்ளாச்சி; தேசிய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 'ஐடியா ஹாக்கத்தான் 4.0-' போட்டியை நடத்தியது. அதில், பொள்ளாாச்சி, பி.ஏ., பொறியியல் கல்லுாரி மாணவர்களின் மூன்று புதிய கண்டுபிடிப்புகளுக்காக, 38.3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்லுாரி முதல்வர் மணிகண்டன் கூறியதாவது:
இருசக்கர வாகனங்களுக்கு ஸ்மார்ட் குடை கண்டுபிடிப்புக்காக, தருண்கார்த்திக், 15 லட்சம் ரூபாய்; ரெகான்கோகோ திட்டத்திற்காக, மாணவி நிவேதிதா, 13.3 லட்சம் ரூபாய், மண் மற்றும் கழிவுநீர் வாயிலாக மின்சக்தி பெறும் திட்டத்திற்காக, ஸ்ரீஹரிஷ் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, பேராசிரியர் மீனாட்சிசுந்தரி, துணை பேராசிரியர்கள் கவிதா, அரவிந்த உள்ளிட்டோர் ஆலோசகர்களாக செயல்பட்டனர்.
இவ்வாறு, கூறினார்.