/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐடியா ஸ்பியர்- 2024' ஹேக்கத்தான் போட்டி
/
'ஐடியா ஸ்பியர்- 2024' ஹேக்கத்தான் போட்டி
ADDED : அக் 24, 2024 11:28 PM

கோவை : பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், மாணவர்களின் சிந்தனை மற்றும் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில், 'ஐடியா ஸ்பியர்- 2024' என்ற ஹேக்கத்தான் நிகழ்வை நடத்தியது. பார்க் கல்வி குழுமம் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி துவக்கிவைத்தார்.
இப்போட்டியில் பல்வேறு பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில் இருந்து, 220 அணிகள் பங்கேற்று தனது கண்டுபிடிப்புக்கான ஐடியாக்களை விளக்கினர்.
முதல் இடத்தை பார்க் பொறியியல் கல்லுாரி இதய ரத்த நாளங்களில் அடைப்பு நவீன முறையில் கண்டறில் சார்ந்த ஐடியாவிற்காகவும், இரண்டாம் இடத்தை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி புற்றுநோய் ஆரம்ப நிலை கண்டறிதல், மூன்றாம் இடத்தை என்.ஜி.பி., அணி பயிர் நோயை கண்டறிதல் ஐடியாக்களுக்காக வென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், ஸ்கோமோட் நிறுவனத்தின் தலைவர் செல்வக்குமார், பெங்களூரு கே.வி.எம்., மெட் டெக் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி கிருஷ்ணன், பார்க் கல்வி குழுமம் வேலை வாய்ப்புகள் இயக்குனர் பிரின்ஸ், பார்க் கல்விக்குழும கல்லுாரிகளின் முதல்வர்கள் லட்சுமணன், குமரேசன், சக்திவேல் முருகன், சதிஸ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

