/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மனிதன் நல்லவனாக இருந்தால் ஞானத்தை அடைந்து விடுவான்'
/
'மனிதன் நல்லவனாக இருந்தால் ஞானத்தை அடைந்து விடுவான்'
'மனிதன் நல்லவனாக இருந்தால் ஞானத்தை அடைந்து விடுவான்'
'மனிதன் நல்லவனாக இருந்தால் ஞானத்தை அடைந்து விடுவான்'
ADDED : ஜூன் 23, 2025 11:36 PM

கோவை; கோவை பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில், 89வது சொற்பொழிவு நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அரங்கில் நடந்தது.
சிறப்பு சொற்பொழிவாளராக பங்கேற்ற தமிழருவி மணியன், 'மனம் என்னும் மந்திரச்சாவி' என்ற தலைப்பில் பேசியதாவது:
மனிதனின் மனம் நிலையற்றது. அது ஒவ்வாரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால், விவேகானந்தர், 'மனம் ஒரு குரங்கு' என்று சொன்னார். 'மனிதர்களை, 100 சதவீதம் நல்லவர்கள் என்றும், 100 சதவீதம் கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது' என்கிறார் விவேகானந்தர். அதற்கு காரணம் அவர்களின் மனம் என்கிறார்.
மனிதன் நல்லவனாக இருந்து விட்டால், ஞானத்தை அடைந்து விடுவான். அலைபாயும் மனம், நல்லவனாக மாற விடாது. அதனால், யாருக்கும் நிரந்தரமான மகிழ்ச்சி கிடைப்பதில்லை. மனித வாழ்க்கையில், துயரமே அதிகம். இந்த உலகில் எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக உள்ளன.
இங்கு பொன், பொருள், பணத்தை தேடி அலைபவர்களாக உள்ளனர். இறுதி மூச்சு இருக்கும் வரை, பணத்தின் மீது இருக்கும் ஆசை தீர்வதில்லை. விரும்பிய பொருள் கிடைக்கவில்லை என்றால், அதை அடைய தவறான வழியை தேர்வு செய்கின்றனர். எனவே, மனதை சீர்படுத்த வேண்டும். நிலையான மனமே மகிழ்ச்சி தரும். அதற்கான பயிற்சியும், முயற்சியும் வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.