/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு தரப்பும் சம்மதித்தால்... விவாகரத்துக்கு காரணம் தேவையா?
/
இரு தரப்பும் சம்மதித்தால்... விவாகரத்துக்கு காரணம் தேவையா?
இரு தரப்பும் சம்மதித்தால்... விவாகரத்துக்கு காரணம் தேவையா?
இரு தரப்பும் சம்மதித்தால்... விவாகரத்துக்கு காரணம் தேவையா?
ADDED : ஆக 16, 2025 09:14 PM

கணவன் -மனைவிக்கிடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டால், அவர்களில் ஒருவர் விவாகரத்து கேட்கிறார். மற்றொருவர் விவாகரத்து தர மறுக்கிறார். சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் திருமணம், விவாகரத்து, குழந்தை வளர்ப்பு, சொத்துரிமை இவைகள் மதம் சார்ந்து உள்ளது. ஹிந்துக்கள் என்றால் ஹிந்து திருமண சட்டம் 1955, கிறிஸ்தவர் என்றால் இந்திய விவாகரத்து சட்டம் 1869, இஸ்லாமியர் என்றால் ஷரியத் சட்டங்கள் வழிகாட்டுகின்றன.
குறிப்பாக, முஸ்லிம் தனிநபர் ஷரியத் விண்ணப்ப சட்டம் 1937, முஸ்லிம் திருமண கலைப்பு சட்டம் , 1939, முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1986 மற்றும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் , 2019 ஆகியவைஉள்ளன.
கணவனோ, மனைவியோ(கன்டஸ்ட்) விவாகரத்து மனு தாக்கல் செய்யும்போது ஒருவர், மற்றொருவர் மீது விவாகரத்துக்குரிய காரணத்தை, தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உதாரணத்திற்கு, கொடுமைப்படுத்துதல், திருமண பந்தத்திலிருந்து வெளியேறுதல், ஆண்மையற்றவராக இருத்தல், குணப்படுத்த முடியாத நோய், தாம்பத்ய உறவுக்கு மறுத்தல் போன்ற பல காரணங்களால் விவாகரத்து கோரலாம்.
அவைகளை தெளிவாக மனுவில் குறிப்பிட்டு, குடும்ப நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தால் விவாகரத்து கிடைக்கும். இரு தரப்பும் (மியூச்சுவல்) சம்மதித்து, விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வதற்கு, காரணங்கள் குறிப்பிட தேவையில்லை.
ஒருவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்திற்கான கிரைய பத்திரம் இல்லை. ஆனால், அவரது பெயரில் பட்டா, சிட்டா, சொத்துவரி, குடிநீர் வரி இருந்தால், உரிமையாளர் ஆக முடியுமா?
வருவாய் துறை ஆவணங்களில், ஒருவர் பெயர் இருப்பதால் மட்டுமே அவர் உரிமையாளர் ஆகி விடமுடியாது என்று, உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது. சொத்துக்கு உரிமையாளராக இருக்க வேண்டும் என்றால், கிரையப்பத்திரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கிரையப்பத்திரம் இல்லாமல், வருவாய் துறை ஆவணங்களை மட்டுமே கொண்டு, ஒருவர் உரிமையாளர் என்று கோர முடியாது.
- வக்கீல் ஆர்.சண்முகம்.
ரேஸ்கோர்ஸ்