/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை ஓலை மஞ்சளாக இருந்தால் சத்து குறைபாடு!
/
தென்னை ஓலை மஞ்சளாக இருந்தால் சத்து குறைபாடு!
ADDED : செப் 10, 2025 09:46 PM

கிணத்துக்கடவு; தென்னை ஓலை மஞ்சள் நிறமாவதை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில், 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில் பல்வேறு நோய் மற்றும் சத்து குறைபாடுகள் உள்ளன. இதில், தென்னை ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறி, நோய் தாக்குதல் அடைந்துள்ளது போல் காணப்படுகிறது. இதை தவிர்க்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதில், தென்னை ஓலையின் இலைகளில் மஞ்சள் நிறமாக காணப்படுவது நோய் அல்ல. இது ஒரு சத்து குறைபாடு. நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையால் ஓலைகள் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதை சரி செய்ய, ஒரு கிலோ மெக்னீசியம் சல்பேட் மற்றும் 200 கிராம் காப்பர் சல்பேட் என இரண்டையும், 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து தென்னை மரத்தை சுற்றிலும், 3 அடி தள்ளி மண்ணுக்குள் இட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இப்பிரச்சினை கட்டுக்குள் வரும், என தெரிவித்தார்.