sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வித்தியாசம் இருந்தால் நிலைத்து நிற்கலாம்! சொல்கிறார் இல்லத்தரசிகளின் பிரியமான 'சுஜிதா'

/

வித்தியாசம் இருந்தால் நிலைத்து நிற்கலாம்! சொல்கிறார் இல்லத்தரசிகளின் பிரியமான 'சுஜிதா'

வித்தியாசம் இருந்தால் நிலைத்து நிற்கலாம்! சொல்கிறார் இல்லத்தரசிகளின் பிரியமான 'சுஜிதா'

வித்தியாசம் இருந்தால் நிலைத்து நிற்கலாம்! சொல்கிறார் இல்லத்தரசிகளின் பிரியமான 'சுஜிதா'


ADDED : ஏப் 26, 2025 11:11 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைப் பருவத்தில் சினிமாவில் அறிமுகமானவர் சுஜிதா. பூவிழி வாசலிலே, முந்தானை முடிச்சு என, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் வெளியான 'பாண்டியன் ஸ்டோர்' (முதல் பாகம்) நாடகத்தில் தனமாக வந்து, இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

தெலுங்குபாளையத்தில் நடந்த வீட்டுமனை நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக வந்த இவரை சந்தித்து பேசினோம்.

திரைப்படம், நாடகம் என, வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

சிறு வயதிலிருந்தே நடிக்க துவங்கி விட்டதால், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என்ற பெரிய வித்தியாசம் எனக்கு தென்படவில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப, ரசனை மாறியிருக்கிறது. பொதுமக்களின் ரசனையை தெரிந்துக் கொண்டு, நம்மை தயார்படுத்தி, நடிப்பை வித்தியாசமாக கொடுக்க வேண்டும்.

அப்போது, பொதுமக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரே மாதிரியாக இருந்தால், நடிப்பவர்களுக்கும், அதை பார்க்கும் பொதுமக்களுக்கும் ஒரு விதமான சோர்வு வந்து விடும்.

சினிமாவில் மாற்றம் வருகிறது; நாடகங்களில் நிறைய மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்குமே?

சினிமாக்களின் நேரம் இன்று வெகுவாக குறைந்து விட்டது. வித்தியாசமாக கதைக்களம் கொண்ட சினிமாக்களை, பல மொழிகளில் பார்த்து வருகிறோம். அதுபோல், நாடகத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள், பெரியவர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு நிமிட 'ரீல்ஸ்' பிடிக்கவில்லை என்றாலும், அதை நகர்த்தி விடுகின்றனர். எல்லாமே சவாலாக இருக்கிறது.

பல தொடர்களை பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டுகிறதே?

ஒரே மாதிரியான தொடர்கள் கொடுத்தால், பார்ப்பவர்களுக்கும் சலிப்பு தட்டி விடும். எனவே, தொலைக்காட்சி தொடர்களை, பொதுமக்களுக்கு பிடிக்கும் வகையில், குழுவினர், நாளுக்கு நாள் அபரிமிதமான உழைப்பை தர வேண்டியுள்ளது.

இப்போது நடக்கும் தொடர்கள் குறித்து...

மலையாளத்தில் 'அர்ச்சனா சேச்சி' என்ற தொடரில், நடிக்க உள்ளேன். கால நேரம் பார்க்காமல் உழைத்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டால், வாழ்க்கைக்கு அது நல்லது.






      Dinamalar
      Follow us