/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கடவுளை நாம் பேச ஆரம்பித்து விட்டால் செல்வந்தர்கள் தான்'
/
'கடவுளை நாம் பேச ஆரம்பித்து விட்டால் செல்வந்தர்கள் தான்'
'கடவுளை நாம் பேச ஆரம்பித்து விட்டால் செல்வந்தர்கள் தான்'
'கடவுளை நாம் பேச ஆரம்பித்து விட்டால் செல்வந்தர்கள் தான்'
ADDED : ஜன 03, 2025 11:45 PM

கோவை; கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' எனும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கிக்கானி பள்ளி அரங்கில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த இரண்டாம் நாள் நிகழ்வில், 'அருளாளர் ஆண்டாள்' எனும் தலைப்பில், ஆன்மிக உரையாற்றிய ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:
ஆண்டாள் பாடியது ஆன்மிக அறிவியல். கடவுளை நாம் பேச ஆரம்பித்துவிட்டால் செல்வந்தர்கள் தான். நம் வேதங்களில் அனைத்தும் உள்ளன. பெருமாளை சரணடைந்தால் அனைத்தும் கிடைக்கும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பகுத்தறிவு பொதிந்து கிடக்கிறது. கடவுள் எப்படி இருக்கிறார் என்றால், நீ எப்படி பார்க்கிறாயோ அப்படி இருக்கிறார் என வேதங்கள் சொல்கின்றன. ஆண்டாள் பாட்டுகள் வேதங்களுக்கு வித்தாகும், பாதகங்கள் தீர்க்கும்.
இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, பிரியங்கா வரதன் குழுவினரின், அருளிசை நிகழ்ச்சி நடந்தது.