/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவையில் மனை வாங்கினால் சில ஆண்டுகளில் நல்ல விலை'
/
'கோவையில் மனை வாங்கினால் சில ஆண்டுகளில் நல்ல விலை'
'கோவையில் மனை வாங்கினால் சில ஆண்டுகளில் நல்ல விலை'
'கோவையில் மனை வாங்கினால் சில ஆண்டுகளில் நல்ல விலை'
ADDED : மார் 15, 2024 08:25 PM

''கோவையில் செய்யப்படும் மனை முதலீடுகளுக்கு, சில ஆண்டுகளில் நல்ல விலை கிடைக்கிறது,'' என்கிறார் கோவையை சேர்ந்த, 'கோடிஸ்' புரமோட்டர்ஸ் உரிமையாளர் ராஜசேகர்.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக, 40க்கும் மேற்பட்ட வீட்டு மனை விற்பனை திட்டங்களை முடித்துள்ளோம். மனைகளில் ரோடு, பாதாள சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, அரசு அங்கீகாரம் பெற்று வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கிறோம்.
குடியிருப்புக்கு உகந்த பகுதி கோவைதான். சீதோஷ்ணம், பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்தும் இங்கு இருப்பதால், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், இங்கு குடியேற விரும்புகின்றனர்.
மனை முதலீடுகளுக்கு, சில ஆண்டுகளில் நல்ல விலை கிடைக்கிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம்(ரெரா), பணம் மடைமாற்றம் செய்வதை தடுக்கிறது. பொருளாதார ரீதியான பாதுகாப்பை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
அதேசமயம், வாடிக்கையாளர்களும் மனை வாங்கும் போது, சட்ட ரீதியான பிரச்னைகள் உள்ளதா என்பதை,வழக்கறிஞர்கள் வாயிலாக உறுதிசெய்ய வேண்டும். சரியான நபரிடம் முதலீடு செய்து, வீட்டு மனைகளை கவனமாக வாங்குவது கட்டாயம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

