/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் புகார் அளிக்கலாம் என்றால் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் காணோமே! கூடுதல் மகளிர் ஸ்டேஷன்கள் அமைக்க கோரிக்கை

UPDATED : ஜூலை 28, 2025 04:00 PM
ADDED : ஜூலை 27, 2025 11:17 PM
போத்தனூர்; கோவை மாவட்ட எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டில், 33 சட்டம் -- ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், ஆறு டி.எஸ்.,பிக்கள் மேற்பார்வையில் செயல்படுகின்றன. அத்துடன், ஆறு அனைத்து மகளிர் ஸ்டேஷன்களும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனும் கூடுதலாக உள்ளன.
இதில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் பெரும்பாலும் தொலைவில் அமைந்துள்ளன. உதாரணமாக பேரூர் சரகத்தில், காருண்யா நகர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர், மதுக்கரை, க.க.சாவடி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன்கள் அடங்கும்.
இப்பகுதிகளில் நடக்கும் மகளிர் தொடர்பான பிரச்னைகளுக்கு புகார் அளிக்க, சுமார், 10 -- 25 கி.மீ,, தொலைவு கடந்து போத்தனூர், சாரதா மில் சாலையிலுள்ள, மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் இரு பஸ்கள் மாறி, பயணிக்க வேண்டும்.
பெண்கள், இத்தனை தொலைவு சென்று புகார் தரவேண்டுமா என்ற எண்ணத்தில், போலீஸ் ஸ்டேஷன் செல்லவே யோசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனை தவிர்க்க காருண்யா நகர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர் போலீஸ் ஸ்டேஷன்களை உள்ளடக்கி, பேரூரில் ஒரு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கலாம்.
அதுபோல், போத்தனூரில் தற்போதுள்ள ஸ்டேஷனை, மதுக்கரை சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்திலேயே அமைக்கலாம்.
இந்நடவடிக்கையை மேற்கொள்ள கோரி, மாவட்ட கலெக்டருக்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் மனு கொடுத்துள்ளார்.
ஈஸ்வரன் கூறுகையில், ''மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை, சப் டிவிஷனுக்கு ஒன்று எனும் கணக்கில் செயல்படுகிறது. மக்கள்தொகை, பிரச்னைகள் அதிகரிப்பால் புகார்களை, உடனடியாக விசாரிக்க இயலாத நிலை உள்ளது. இதனை தவிர்க்க ஒவ்வொரு சப் -டிவிஷனிலும் கூடுதலாக, ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேஷன், அதுவும் மக்கள் எளிதில் வந்து, செல்லும் வகையில் அமைக்க வேண்டும்,'' என்றார்.