/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளியூர் போனால் சொல்லிட்டு போங்க!
/
வெளியூர் போனால் சொல்லிட்டு போங்க!
ADDED : ஏப் 19, 2025 03:15 AM
தொண்டாமுத்தூர்: கோவை புறநகர் பகுதிகளில், பூட்டிய வீடுகளில் திருட்டு நடப்பதை தடுக்க, வெளியூர் செல்பவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தனியாக உள்ள வீடுகள், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவது அதிகரித்துள்ளது. முந்தைய காலங்களில், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், அப்பகுதிக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என, மாவட்ட போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், வெளியூர் செல்லும் மக்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து செல்வது குறைந்துள்ளது. இதனால், பூட்டிய வீடுகளில், திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், தொண்டாமுத்தூர் மற்றும் பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மொத்தம், 4 வீட்டின் கதவுகளை உடைத்து, நகை மற்றும் பணம் திருடி சென்றுள்ளனர். எனவே, திருட்டை தடுக்க வெளியூர் செல்லும் மக்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

