/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த ரோடு சீரமைப்பு புகார் இருந்தால் அழைக்கலாம்
/
சேதமடைந்த ரோடு சீரமைப்பு புகார் இருந்தால் அழைக்கலாம்
சேதமடைந்த ரோடு சீரமைப்பு புகார் இருந்தால் அழைக்கலாம்
சேதமடைந்த ரோடு சீரமைப்பு புகார் இருந்தால் அழைக்கலாம்
ADDED : அக் 22, 2025 11:24 PM
கோவை: மாநகரில் பெய்துவரும் மழை காரணமாக பள்ளி வளாகங்கள், அரசு அலுவலகங்கள், தாழ்வான பகுதிகள், ரோட்டின் ஓரங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. நீர் உறிஞ்சும் வாகனம் வாயிலாக தண்ணீரை வெளியேற்றும் பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இடையர்பாளையம் ரோடு வ.உ.சி. வீதி, குமரன் வீதி, மகேஸ்வரி காலனி, பாலாஜி கார்டன், அன்பு நகர், முல்லை நகர், சத்தி ரோடு அத்திபாளையம் பிரிவு, சரவணம்பட்டி கட்டபொம்மன் வீதி உள்ளிட்ட இடங்களில், நேற்று மழைநீர் வெளியேற்றப்பட்டது.
மழையால் சேதமடைந்த ரோடுகள், 'வெட்மிக்ஸ்' கொண்டு சீரமைக்கப்படுகின்றன. மழை தொடர்பான புகார் அளிக்க, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை, 0422 2302323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.