sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேற்கூரையில் கூலிங் டைல்ஸ் பதித்தால் கோடையிலும் 'குளுகுளு' அனுபவிக்கலாம்!

/

மேற்கூரையில் கூலிங் டைல்ஸ் பதித்தால் கோடையிலும் 'குளுகுளு' அனுபவிக்கலாம்!

மேற்கூரையில் கூலிங் டைல்ஸ் பதித்தால் கோடையிலும் 'குளுகுளு' அனுபவிக்கலாம்!

மேற்கூரையில் கூலிங் டைல்ஸ் பதித்தால் கோடையிலும் 'குளுகுளு' அனுபவிக்கலாம்!


ADDED : பிப் 17, 2024 02:19 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வெய்யிலின் தாக்கத்தை குறைக்க, வீட்டின் மேற்பகுதியில் கூலிங் டைல்ஸ் அமைக்கலாம் அல்லது கூல் கோட்டிங் பெயின்ட் அடிக்கலாம்,'' என்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) தலைவர் ரமேஷ்குமார்.

நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும், கட்டடத்தில் அஸ்திவாரத்திற்காக தோண்டியபோது கிடைத்த களிமண்ணை, பேஸ்மென்ட்டில் பாதி அளவு நிரப்பி விட்டு, அதன் மீது கிராவல் மண்ணை கொட்டி நிரப்பி கொள்ளலாம் என, எங்கள் கான்ட்ராக்டர் சொல்கிறார். இது சரியா?

- -ராதாகிருஷ்ணன் ஒண்டிப்புதூர்

எக்காரணத்தைக் கொண்டும், பேஸ்மென்டில் களிமண்ணை கொட்டக்கூடாது. களிமண்ணில் நீரை ஊற்றினால், அது விரிவடையும் தன்மையுள்ளதால், வரும் காலத்தில் பேஸ்மென்டில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தரமான கிராவல் மண்ணை கொண்டு, பேஸ்மென்டை நிரப்புவதே சிறந்தது.

நாங்கள் வீடு கட்டி 10 ஆண்டுகள் ஆகிறது. தற்போது எங்கள் வீட்டில் உள்ள சன் ஷேடின் அடிப்பகுதியில் பூசப்பட்ட பூச்சு கழன்று விழுந்து, கம்பிகள் தெரிகின்றன. இதை எப்படி சரி செய்யலாம்?

-- துரைசாமி, பீளமேடு

சன் ஷேடுக்கு கான்கிரீட் போடும் சமயத்தில், கம்பிகளுக்கு கீழே சரியான முறையில் கவர் பிலாக் வைக்காமல் இருந்தால், இதுபோன்று நிகழும். இதை சரி செய்ய, கம்பியை சுற்றியுள்ள கலவையை சுத்தம் செய்து, கம்பியின் மீது 'ஆன்டி க்ரோசிவ் பெயின்ட்' அடித்து, சிமென்ட் கலவையில் பாண்டிங் கெமிக்கலை கலந்து பூசினால் போதும்.

கோடை காலம் துவங்கி விட்டது. வீட்டு அறைகளின் உட்பகுதியில் , காலை 11:00 மணிக்கு மேலே அதிக வெப்பம் அடிக்கிறது. உஷ்ணம் தாங்க முடிவதில்லை. இதை எவ்வாறு குறைக்கலாம்?

--கவிதா, பாப்பநாயக்கன்பாளையம்

வீட்டின் கூரையின் மேற்புறம், கூலிங் டைல்ஸ் பதிக்கலாம் அல்லது தற்போது மார்க்கெட்டில் விற்கப்படும் கூல் கோட்டிங் பெயின்ட்டை அடிப்பதன் மூலமும், வீட்டிற்குள் வரும் வெப்பத்தை ஓரளவு குறைக்கலாம்.

வீடுகளை சுற்றி அமைக்கப்படும் காம்பவுண்ட் சுவற்றின் உயரம் எவ்வளவு வைக்கலாம்?

- மணிகண்டன், சுந்தராபுரம்

வீட்டின் வெளிப்புறம் உள்ள போர்டிகோ தரை மட்டத்திலிருந்து, குறைந்தது நாலரை அடி அல்லது வீட்டில் வைக்கப்பட்டுள்ள, ஜன்னலின் கீழ் மட்டத்தின் உயரத்துக்கு சரியாக வரும்படி வைக்கலாம். காம்பவுண்டு சுவர் வெளியில் இருந்து வரும் காற்றையும், வெளிச்சத்தையும் தடுக்காமல் இருக்க வேண்டும். அதற்கேற்ப உயரத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

எங்கள் வீட்டில் கட்டப்பட்டுள்ள நிலத்தடி நீர் தொட்டியில் சிறிது விரிசல் ஏற்பட்டு, குடிநீர் சிறிது சிறிதாக வெளியேறுகிறது. இதை எப்படி தடுக்கலாம்?

- சுப்ரமணி, ஜோதிபுரம்

தங்களது நீர் தொட்டியின் விரிசலின் தன்மையை, நேரில் பார்த்தால் தான் சரியான வழிமுறையை கூற முடியும். இருப்பினும், எந்த அளவுக்கு வெடிப்புகள் இருந்தாலும் அதை தடுத்து சரி செய்ய, புதிய வாட்டர் ப்ரூபிங் தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. சிறந்த முறையில் வாட்டர் ப்ரூபிங் செய்யும் நிறுவனத்தை அழைத்து, அதை சரிப்படுத்திக் கொள்ளலாம்.

நாங்கள் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். செங்கல் சுவற்றுக்கு எத்தனை நாட்கள் நீர்ப்பாய்ச்சி, கியூரிங் செய்ய வேண்டும்?

- ஐஸ்வர்யா, ராமநாதபுரம்

புதிய கட்டுமானங்கள் எதுவாக இருப்பினும், குறைந்தது ஏழு நாட்கள் காலை மற்றும் மாலை நீர் பாய்ச்சி, கியூரிங் செய்ய வேண்டியது அவசியம். அனைத்து கான்கிரீட்டுக்கும் குறைந்தது ஏழு நாட்கள் நீரை தேக்கி வைத்தோ அல்லது எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறோ பார்த்துக் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us