/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் ஓட்டினா... ெஹல்மெட் அணியணும்! சாலை பாதுகாப்பு விழாவில் 'அட்வைஸ்'
/
பைக் ஓட்டினா... ெஹல்மெட் அணியணும்! சாலை பாதுகாப்பு விழாவில் 'அட்வைஸ்'
பைக் ஓட்டினா... ெஹல்மெட் அணியணும்! சாலை பாதுகாப்பு விழாவில் 'அட்வைஸ்'
பைக் ஓட்டினா... ெஹல்மெட் அணியணும்! சாலை பாதுகாப்பு விழாவில் 'அட்வைஸ்'
ADDED : ஜன 28, 2025 11:15 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சியில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து போலீஸ் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சுமதி, பேராசிரியர்கள் போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர்.
பேரணியில், பங்கேற்ற மாணவ, மாணவியர், ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், கல்லுாரியில் இருந்து, நியூஸ்கீம் ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, ெஹல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். கார்களில் செல்லும் போது 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். மது குடித்த நிலையில், வாகனங்களை இயக்க கூடாது; அதிவேகமாக செல்லக்கூடாது. சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்துகளை தவிர்ப்போம், என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீ தடுப்பு விழிப்புணர்வு
பொள்ளாச்சி வட்டார போக்குரவத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்வு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் கணபதி மற்றும் குழுவினரால், தீ விபத்துகள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கோவை மாவட்ட தலைமை டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.