/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்கை பார்த்தால் தகவல் சொல்லுங்க!
/
குரங்கை பார்த்தால் தகவல் சொல்லுங்க!
ADDED : டிச 15, 2024 11:54 PM
கோவை; கோவை உக்கடம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள், சுற்றித் திரியும் குரங்கைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உக்கடம் பொன்விழா நகர் பகுதியில், ஒற்றைக் குரங்கு தனியாக சுற்றித் திரிந்தது. மரங்கள், மொட்டை மாடி, சுற்றுச்சுவர், வீட்டின் முன்பகுதி என பல்வேறு இடங்களிலும் அந்தக் குரங்கு அலைந்து திரிகிறது. யாரையும் அச்சுறுத்தவோ, பொருட்களை சேதப்படுத்தவோ இல்லை.
எனினும், விஷமிகளால் அந்தக் குரங்குக்கோ, குரங்கால் பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக, அந்தக் குரங்கைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என, வனத்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குரங்கைப் பார்த்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்படி, பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

