sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வங்கி கணக்கு விபரம் பகிர்ந்தால் 'உள்ளே' தள்ளிருவோம்! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

/

வங்கி கணக்கு விபரம் பகிர்ந்தால் 'உள்ளே' தள்ளிருவோம்! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

வங்கி கணக்கு விபரம் பகிர்ந்தால் 'உள்ளே' தள்ளிருவோம்! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

வங்கி கணக்கு விபரம் பகிர்ந்தால் 'உள்ளே' தள்ளிருவோம்! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை


UPDATED : ஜன 22, 2025 12:40 AM

ADDED : ஜன 22, 2025 12:33 AM

Google News

UPDATED : ஜன 22, 2025 12:40 AM ADDED : ஜன 22, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம், வங்கிக்கணக்கு விபரங்களை கொடுத்தால் அவர்களும் குற்றவாளியாக கருதப்பட்டு, கைது செய்யப்படுவர் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணையவழி மோசடியால், ஒவ்வொரு நாளும் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கோவையில் ஆன்லைன் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், இணைய வழி மோசடி தொடர்பாக, 8,254 புகார்களை பெற்றுள்ளனர். இவற்றில், 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மொத்தம், ரூ.94 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதில், ரூ.11 கோடியை மீட்ட போலீசார், 50 பேரை கைது செய்துள்ளனர்.

மோசடி பேர்வழிகள் ஒரு புறம் என்றால், அவர்களுக்கு துணை போனவர்களின் எண்ணிக்கையும் அதிகம். சிலர், தாங்கள் செய்வது குற்றம் என தெரிந்தும், மோசடி பேர்வழிகளுக்கு தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை தந்து, கமிஷன் பெறுகின்றனர்.

சமீபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதப்பன் என்பவர், நடப்பு கணக்கு உட்பட, எட்டு வங்கிக்கணக்குகளை துவங்கி, மோசடி நபர்களுக்கு வழங்கி உள்ளார். மோசடி பேர்வழிகள், அவற்றை பயன்படுத்தி பல்வேறு நபர்களிடம் இருந்து, பண மோசடி செய்துள்ளனர்.

இரு வங்கிக்கணக்குகள் வாயிலாக மட்டும், இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதன் காரணமாக, மாதப்பன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மோசடியில் ஈடுபடாவிட்டாலும், அதற்கு உடந்தையாக, தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை கொடுத்தாலும், அதுவும் குற்றமாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்கின்றனர், சைபர் கிரைம் போலீசார்.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் கூறியதாவது:

இணைய வழி மோசடிகளை தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோசடிக்கு தெரிந்தே உதவுபவர்கள் குற்றவாளிகளே. மோசடியில் இருந்து சிறிய அளவு கமிஷன் அல்லது பணத்துக்காக, தெரிந்தே தான் வங்கிக்கணக்கு விபரங்களை தருகின்றனர்.

அப்படி எனில், குற்றத்துக்கு அவர்களும் துணை போகின்றனர் என்றுதான் பொருள். எனவே அவர்களும் குற்றவாளிகள்தான். அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவர். நாடு முழுவதும் நடக்கும் பண மோசடி குற்றங்கள், இதுபோன்று வங்கிக்கணக்கு கொடுத்து உதவுபவர்களால்தான் அதிகளவில் நடக்கிறது.

இதுபோன்று மோசடி நபர்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us