/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அசையாமல் நின்றால் முதுகிலும் போஸ்டர் ஒட்டி விடுவார்கள்!
/
அசையாமல் நின்றால் முதுகிலும் போஸ்டர் ஒட்டி விடுவார்கள்!
அசையாமல் நின்றால் முதுகிலும் போஸ்டர் ஒட்டி விடுவார்கள்!
அசையாமல் நின்றால் முதுகிலும் போஸ்டர் ஒட்டி விடுவார்கள்!
ADDED : மே 19, 2025 11:20 PM

வால்பாறை; வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரையில், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
வால்பாறை நகரில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. அனைத்து எஸ்டேட்களுக்கும், அரசு பஸ்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பயணியர் வசதிக்காக கட்டப்பட்டுள்ள நிழற்கூரையை சுற்றிலும் அரசியல்கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால், நகராட்சி பயணியர் நிழற்க்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
பயணியர் கூறியதாவது:
வால்பாறை நகராட்சி சார்பில், பல லட்சம் மதிப்பீட்டில் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பயணியர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நிழற்கூரை முழுவதும், பல்வேறு அரசியல் கட்சியினர் விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதோடு, விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் அகற்றி, போஸ்டர் ஒட்டிய அரசியல் கட்சியினருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.