/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கியமும், தமிழும் படித்தால் உயர்வு: கல்லூரி பயிற்சி முகாமில் தகவல்

ADDED : பிப் 02, 2024 11:08 PM
- நமது நிருபர் -
''இலக்கியமும், தமிழும் படித்தவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்வானவர்களாக உள்ளனர். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எண்ணங்கள் சரியாகவும், நிறைவாகவும் இருந்தால், எல்லாம் சரியாக இருக்கும்'' என்று இளையோர் இலக்கியப் பயிற்சி மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நெல்லை ஜெயந்தா பேசினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், இளையோர் இலக்கியப் பயிற்சி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நடந்தது.
இளையோர் இலக்கியப் பயிற்சி மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நெல்லை ஜெயந்தா பேசியதாவது: தமிழ் மொழி தரும் வளர்ச்சியை யாராலும் தர முடியாது. பொறியியல் படிப்புக்கு கிடைக்காத கவுரவம், தமிழுக்கு கிடைக்கிறது என்றால், அதில் பொதிந்துகிடக்கும் அர்த்தங்கள் தான். இலக்கியமும், தமிழும் படித்தவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்வானவர்களாக உள்ளனர்.
நாளைய தலைமுறையான உங்களின் மனம் தான் உங்களை ஒழுங்குபடுத்தும், வாழ்வை தீர்மானிக்கும். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எண்ணங்கள் சரியாகவும், நிறைவாகவும் இருந்ததால், எல்லாம் சரியாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.