/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அதிகாலை எழுந்தால் நாள் முழுதும் சுறுசுறுப்பு'
/
'அதிகாலை எழுந்தால் நாள் முழுதும் சுறுசுறுப்பு'
ADDED : ஆக 02, 2025 11:39 PM

''அ திகாலை எழுந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம்,'' என்கிறார், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார்.
''காலை 5:00 மணிக்கு எழுந்து விடுவேன். பின் நடைபயிற்சி மேற்கொள்வேன். அப்படி செய்வதால், உட்கொண்ட உணவு எரிக்கப்படுகிறது. தேவையற்ற விஷயங்கள் கரைந்து விடுகின்றன. சீக்கிரம் எழுவதால் அன்று நாள் முழுவதும், சுறுசுறுப்புடன் இருக்க முடிகிறது. இதற்கு, இரவு விரைவில் உறங்க சென்று விட வேண்டும். உடலுக்கு தேவையான ஓய்வை கட்டாயம் வழங்க வேண்டும்,''
''உணவு பழக்கம் எப்படி?'' ''எந்த உணவையும் அளவுக்கு மீறி உட்கொள்ளக்கூடாது. அவ்வாறு உட்கொண்டால் அதற்கேற்ற உடற்பயிற்சி செய்து விட வேண்டும். அது நமக்கு சாத்தியமா என்பதை யோசித்து உட்கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் உண்கிறேன்,'' என்றார்.