sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு வேலை வேண்டுமென்றால் மாதிரி தேர்வு எழுதிப்பாருங்க!

/

அரசு வேலை வேண்டுமென்றால் மாதிரி தேர்வு எழுதிப்பாருங்க!

அரசு வேலை வேண்டுமென்றால் மாதிரி தேர்வு எழுதிப்பாருங்க!

அரசு வேலை வேண்டுமென்றால் மாதிரி தேர்வு எழுதிப்பாருங்க!


ADDED : மே 24, 2025 05:56 AM

Google News

ADDED : மே 24, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் கோவை மாவட்ட இளைஞர்கள், பாடவாரியான தேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வில் பங்கேற்க, அழைப்பு விடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையானது, அரசு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில், இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைதளத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது.

குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான பாடவாரியாகவும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான பாடவாரியான தேர்வுகள் வரும் 26, 30 ஆகிய தேதிகளிலும், ஜூன் 2 மற்றும் 6ம் தேதிகளில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

குரூப் 4 தேர்வுக்கான இணையவழி முழு மாதிரி தேர்வுகள், ஜூன் 10, 17ம் தேதிகளில் நடக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் கோவை மாவட்ட இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

மாதிரி தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் வேலை நாடுநர்கள், மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https:/tamilnadu careerservices.tn.gov.in) தங்கள் பெயர் விபரங்களை, candidate registrationல் பதிவு செய்வது அவசியம். போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் தங்களை பதிவு செய்து, மென்பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம்.

குரூப் 1 தேர்வுக்கான மாநில அளவிலான நேரடி மாதிரி தேர்வுகள், வரும் 27 மற்றும் ஜூன் 3, 7 ஆகிய தேதிகளிலும், குரூப் 4 தேர்வுக்கான மாநில அளவிலான நேரடி மாதிரி தேர்வுகள், ஜூன் 24 மற்றும் ஜூலை 2, 9ம் தேதிகளிலும் நடக்கிறது.

இத்தேர்வில், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும் என்பதால், குரூப் 1 தேர்வு எழுத விரும்புவோர், https://forms.gle/UPeFt71KqZa8GZT96 என்ற லிங்க் வாயிலாகவும், குரூப் 4 தேர்வு எழுத விரும்புவோர், https://forms.gle/3jUUoVqLsZVCDr4g7 என்ற லிங்கிலும் மற்றும் இரண்டு தேர்வும் எழுத விரும்புவோர், இரண்டு லிங்க்குகளிலும் தனித்தனியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விபரங்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0422 2642388 மற்றும் 94990 55957 என்ற எண்ணிலோ, தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us