/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக ரோடு போட சொன்னால் இப்படி தாறுமாறாகவா போடுவது?
/
புதிதாக ரோடு போட சொன்னால் இப்படி தாறுமாறாகவா போடுவது?
புதிதாக ரோடு போட சொன்னால் இப்படி தாறுமாறாகவா போடுவது?
புதிதாக ரோடு போட சொன்னால் இப்படி தாறுமாறாகவா போடுவது?
ADDED : ஆக 10, 2025 10:50 PM

கோவை; இடையர்பாளையத்திலிருந்து கவுண்டம்பாளையம் வரையிலான சாலையில், சிவாஜி காலனி செல்லும் வழியில் போடப்பட்ட தார்சாலை, மிகவும் தரம் குறைந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தார் சாலைகள் அமைக்கும் போது, சாலையிலுள்ள மேடு பள்ளங்களை சீரமைக்காமல் மேலெழுந்தவாரியாக அமைப்பதால், பெரும்பள்ளங்கள் ஏற்படுகின்றன. தார் குவியல்கள் ஆங்காங்கே உருவாகி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. கோவை தடாகம், இடையர்பாளையத்திலிருந்து கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் சிவாஜி காலனி சாலையில், புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையில் மேடு பள்ளங்கள் சரியான முறையில் சமப்படுத்தப்படாமல், தார்கலவையை கொட்டி மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளனர். சாலை அமைத்து சில மணி நேரங்களிலேயே, மேடு பள்ளங்கள் ஏற்பட்டன. இச்சாலையை மீண்டும் ஒரு முறை செப்பனிட்டு, மேடு பள்ளங்களை சரிசெய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.