/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு... அலட்சியப்படுத்துகிறது ஆர்ப்பாட்டம் நடத்தி ஓய்வூதியர்கள் புகார்

ADDED : ஜன 28, 2026 05:15 AM

அன்னூர்: எவ்வளவு வலியுறுத்தியும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்துவதாக, தமிழக அரசு மீது தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
'70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்தாமல் முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும். கம்யூடேஷன் பிடித்தத்தை, 15 ஆண்டுகளிலிருந்து, 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழனியப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் இளவரசன் பேசுகையில், தமிழக அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கையை புறக்கணிக்கிறது. அலட்சியப்படுத்துகிறது. விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஓய்வூதியர் சங்க செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் சுப்பிரமணி, துணைத்தலைவர் தாமோதர சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.