/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மாற்றம் நோக்கி நடந்த ஐ.ஐ.சி., மண்டலக் கூட்டம்
/
புதிய மாற்றம் நோக்கி நடந்த ஐ.ஐ.சி., மண்டலக் கூட்டம்
புதிய மாற்றம் நோக்கி நடந்த ஐ.ஐ.சி., மண்டலக் கூட்டம்
புதிய மாற்றம் நோக்கி நடந்த ஐ.ஐ.சி., மண்டலக் கூட்டம்
ADDED : நவ 27, 2025 05:27 AM

கோவை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி ஆகியவை இணைந்து, ஆறாவது ஐ.ஐ.சி., பிராந்தியக் கூட்டத்தை நடத்தின. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் ஆலோசகர் ராகவ் டாஷ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சிலின் செயலர் வின்சன்ட், பிரான்ஸ்டெக் பெல்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்துறை நிபுணர் சுப்பிரமணியம், தொழில்நுட்பக் கல்விக்கான கூட்டமைப்பின் இயக்குனர் அழகர்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த கூட்டத்திற்கு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்களைச் சார்ந்த, 391 உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து சுமார் 1,600 பேர் பங்கேற்றனர்.
மாணவர்களின் கண்டுபிடிப்புகள், சுயதொழில் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளின் கண்காட்சிகள், வல்லுனர்களின் தொழில்நுட்ப அமர்வுகள் நடந்தன. கல்லுாரி செயலர் கண்ணையன், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் (பொறுப்பு) செங்குட்டுவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

