ADDED : ஜன 28, 2024 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலையில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
நல்ல தரமான இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளது. அனைத்து இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இளநீர் அறுவடை சுறுசுறுப்பாக உள்ளது.
எனவே, இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 21 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 7,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரக்கூடிய வாரங்களில் இளநீரின் விலை உறுதியாக உயரும். இவ்வாறு, தெரிவித்தார்.