/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
/
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
ADDED : ஜன 16, 2026 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ், 60, என்பவரிடம் விசாரணை செய்தனர்.
அவர், மது விற்பனை செய்தது உறுதியானது தொடர்ந்து, 20 மது பாட்டில்கள், 2,500 ரூபாய் பணம் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

