ADDED : ஏப் 21, 2025 05:03 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில், கிணத்துக்கடவு ஆர்.எஸ்., ரோடு அரசு மதுபான டாஸ்மாக் கடை அருகே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 45, அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள் மற்றும் வடபுதூர் டாஸ்மாக் மதுக்கடை அருகே, புதுக்கோட்டையைச்சேர்ந்த விக்னேஷ், 32 என்பவரிடமிருந்து, 21 மது பாட்டில்கள் என மொத்தம், 41 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போன்று சொக்கனூர் பகுதியில் காளிமுத்து, 51, விவசாயி என்பவரது தோட்டத்திலிருந்து, 15 லிட்டர் 'கள்' பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோத மது மற்றும் கள் விற்பனையில் ஈடுபட்ட மூவரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
