/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட விரோதமாக இயங்கிய டாஸ்மாக் 'பார்'க்கு சீல்
/
சட்ட விரோதமாக இயங்கிய டாஸ்மாக் 'பார்'க்கு சீல்
ADDED : பிப் 07, 2024 10:59 PM
உடுமலை : உடுமலை அருகே, சட்ட விரோதமாக இயங்கி வந்த, டாஸ்மாக் மதுக்கடை 'பார்'க்கு சீல் வைக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம், பெரியபட்டியில், டாஸ்மாக் மதுக்கடை ( எண் 2018) செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், உரிய அனுமதியின்றி, சட்ட விரோதமாக மது அருந்தும் மையம் (பார்) செயல்பட்டு வந்தது.
இது குறித்து குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் குணசேகரன் சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை, மதுவிலக்கு போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 'பார்'க்கு சீல் வைத்தனர்.
இப்பகுதியில், தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. எனவே, அதனையும் தடுக்க வேண்டும் என பா.ஜ., கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

