/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ--சேவை மையங்களில் இடைத்தரகர்களால் பாதிப்பு
/
இ--சேவை மையங்களில் இடைத்தரகர்களால் பாதிப்பு
ADDED : டிச 29, 2024 11:43 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இ-சேவை மையங்கள் அதிக அளவு உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான மக்கள், பிறப்பு, இறப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் பெற வந்து செல்கின்றனர்.
இ-சேவை மையங்களில் கூட்டம் அதிகரிப்பால், பொதுமக்களிடம் சிலர் இடைத்தரகர்கள் போல செயல்படுகின்றனர். இதனால், வழக்கமான கட்டணத்துடன், சான்றிதழ்களுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை இடைத்தரகர்கள் வசூலிக்கின்றனர். அப்பாவி மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், சிலரின் சான்றிதழ்களில் பிழைகள் இருப்பதை திருத்தி வேண்டுமானால், பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி, 'பணியை முடித்து தருகிறேன்' என இடைத்தரகர்கள் கூறி, பெரிய தொகையை பெறுகின்றனர்.
எனவே, இ-சேவை மையத்தில் இடைத்தரகர்களை தவிர்த்து, பொதுமக்கள் எளிதாக சான்றிதழ்களை பெற வேண்டும். அதற்கு, அரசு அதிகாரிகள் சான்றிதழ் பெறும் முறை குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.