தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மளிகைப் பொருட்கள் விற்பனை பாதிப்பு

 மளிகைப் பொருட்கள் விற்பனை பாதிப்பு

 மளிகைப் பொருட்கள் விற்பனை பாதிப்பு


ADDED : ஏப் 09, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ''காஸ் சிலிண்டர் பிரச்னையால், மளிகைப் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது,'' என, கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய போர் காரணமாக, இந்தியாவில் வணிக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களுக்கு சப்ளை குறைந்து விட்டது. இதனால், உணவு வகைகளின் எண்ணிக்கையை பல ஓட்டல்கள் தற்காலிகமாக குறைத்துள்ளனர்.

பல சிறிய உணவுக்கடைகள், சில கல்லுாரி மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் சமையல் எண்ணெய், பருப்பு, மசாலா பொருட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் கூறியதாவது:

மளிகை பொருட்கள் விற்பனை விலையில், கடந்த ஓராண்டாக பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை. காஸ் சிலிண்டர் பிரச்னையால் விற்பனை குறைந்துள்ளது.

அதிக அளவில் மளிகை பொருட்கள் வாங்குபவர்கள் ஓட்டல் வியாபாரிகள்தான். காஸ் பிரச்னையால் உணவு தயாரிப்பை பாதியாக குறைத்து விட்டனர். பலர் கடைகளை மூடி விட்டனர். வறுவல் உணவு தயாரிப்புகளை நிறுத்தி விட்டனர். இதனால் எண்ணெய் விற்பனை குறைந்துள்ளது.

இனிப்பு தயாரிப்பு குறைந்ததால் சர்க்கரை விற்பனையும் குறைந்துள்ளது. துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் வடை பருப்பு விற்பனை குறைந்துள்ளது. எந்த மளிகை பொருட்களின் விலையும் உயரவில்லை. சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் ஏற்றுமதியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us