sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுங்க! எம்.எல்.ஏ., ஜெயராமன் வேண்டுகோள்

/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுங்க! எம்.எல்.ஏ., ஜெயராமன் வேண்டுகோள்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுங்க! எம்.எல்.ஏ., ஜெயராமன் வேண்டுகோள்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுங்க! எம்.எல்.ஏ., ஜெயராமன் வேண்டுகோள்


ADDED : அக் 07, 2025 12:27 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தின் ஆண்டு விழாவில், ஆனைமலையாறு - நல்லாறு மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை நிறைவேற்ற கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்.எல்.ஏ., ஜெயராமன் வேண்டுகோள் விடுத்தார்.

பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தின் 30வது ஆண்டுவிழா மற்றும் ஓணம் கொண்டாட்டம் நிகழ்ச்சி, உடுமலை ரோடு மகாராஜா மண்டபத்தில் நடந்தது. நாராயண குரு தமிழக பேரமைப்பு தலைவர் செந்தாமரை தலைமை வகித்தார்.

கேரள மாநில மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, சிவகிரி நாராயண குரு தர்ம சங்கம் டிரஸ்ட் தலைவர் சச்சிதானந்தா, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:

ஆனைமலையாறு - நல்லாறு மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை நிறைவேற்ற அ.தி.மு.க., அரசு முழு முயற்சிமேற்கொண்டது. இரு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் கேரளாவில் வெள்ள பாதிப்பு பெரும்பாலும் தவிர்க்கப்படும். கேரளாவிற்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும். அ.தி.மு.க., ஆட்சியின் போது, பேச்சுவார்த்தை முடிந்த நிலையில்,செயல்பாட்டிற்கு வரவில்லை.

தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்திருந்தால், இரு மாநிலங்கள் இடையே ஆனைமலை - நல்லாறு திட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி, அணை கட்டுமானப் பணி, 50 சதவீதம் நிறைவு பெற்றிருக்கும்.

கேரள மாநில அரசு, இரு திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு மற்றும் கொச்சி நோக்கி இரு வழித்தடங்கள் உள்ளன.

அதில், தமிழக எல்லை வரை, நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கேரள மாநிலத்திற்கு உள்ளிட்ட பகுதியிலும், நான்கு வழிச்சாலையாக அமைக்க கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். இரு மாநிலங்கள் இடையே வணிக போக்குவரத்து சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு, பேசினார்.

கேரள அமைச்சர் கிருஷ்ணன்குட்டி பேசுகையில், ''பொள்ளாச்சி எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா அணை திட்டங்கள் நிறைவேற்ற கேரள அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்,'' என்றார்.

எம்.பி., ஸ்ரீ கண்டன் பேசுகையில், ''தமிழக - கேரள எல்லையில் இருந்து, கொச்சி - சேலம் ஆறு வழிச்சாலை வரையான இரு வழித்தடங்களை, நான்கு வழிச்சாயைாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் என மாவட்டங்களைச் சேர்ந்த நாராயண குரு சமாஜத்தின் தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us