தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலை கிராமத்தை மேம்படுத்துங்க!

மலை கிராமத்தை மேம்படுத்துங்க!

மலை கிராமத்தை மேம்படுத்துங்க!


ADDED : செப் 09, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்ட அளவிலான வனக்குழு கூட்டத்தில் அதிகாரிகளிடம் பழங்குடியினர் வலியுறுத்தல்

பொள்ளாச்சி: ‘வனத்தில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தர வேண்டும்,’ என பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கோட்ட அளவிலான வனக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான வனக்குழு கூட்டம் நடந்தது. சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் வாசுதேவன்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல தனி தாசில்தார் ரேணுகாதேவி, வனச்சரகர்கள், பழங்குடியின குடியிருப்பு பகுதி மக்கள் பங்கேற்றனர்.

அதில்,  பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட எருமைப்பாறை – 39, காடாம்பாறை – 9, வெள்ளிமுடி – 40, நெடுங்குன்று – 48 பழங்குடியின மக்களுக்கு வனக்குடியிருப்புகளில் அனுபவத்தில் உள்ள பரப்புக்கு தனி நபர் வன உரிமை வழங்கிட கோரி அளிக்கப்பட்ட உரிமை கோரல் மனுக்கள், மாவட்ட வனக்குழுவுக்கு பரிந்துரை செய்து முன்மொழிவுகள் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

நெடுங்குன்று செட்டில்மென்ட் குடியிருப்பு பகுதியில், 800 மீட்டர் சாலை வசதி, குடியிருப்பு பகுதிக்குள் சாலை, குடிநீர் வசதி மற்றும் சமுதாய கூடம் அமைக்க வேண்டும். வெள்ளிமுடி வனக்குடியிருப்பு பகுதிக்கு சோலார் மின்விளக்கு அமைத்தல் மற்றும் பழுது பார்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வீடற்ற பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் தற்போதைய நிலை, புதிய வீடுகள் கட்டுவதற்கு வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாகர் ஊற்று –1, கோழிகமுத்தி, கூமாட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விரைந்து கட்டி முடித்து தர வலியுறுத்தப்பட்டது.

பழங்குடியின மக்கள் கூறுகையில், ‘வன உரிமை சட்டம் வந்து, 20 ஆண்டுகளாகிறது. இதுவரை திட்ட பலன் எங்களுக்கு கானல் நீராக உள்ளது. ரோடு, குடிநீர், மின் வசதி நிறைவேற்றப்படாமல் உள்ளது. வீட்டுக்கு, ஒன்றரை சென்ட் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கு மாற்றாக,  விவசாயம் மற்றும் குடியிருப்புக்கான இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும்,’ என்றனர்.

வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எருமைப்பாறை, காடாம்பாறை, வெள்ளிமுடி, நெடுங்குன்று  வனக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, அனுபவத்தில் உள்ள பரப்புக்கு தனி நபர் வன உரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டது. ஒரு நபருக்கு, 4 ெஹக்டர் (9.98 ஏக்கர்) வரை வழங்கலாம். இதற்கான புவிசார் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  அவர்களது அனுபவ இடத்தை அளந்து பட்டா வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டது.

குடிநீர் வசதி, கழிப்பிடம், மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உடுமன்பாறை, பரமன்கடவு, சங்கரன்குடி, பாலகிணார் வனக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் மேற்கூரை அமைக்காமல், ஷீட்டாலான தரமான மேற்கூரை கொண்ட புதிய வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது,’ என்றனர்.

பூர்வீக இடமே வேண்டும்!

கல்லார் தெப்பக்குள மேடு பழங்குடியின தலைவர் ராஜலட்சுமி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை ஈத்தக்குழி வன கிராமத்தில் காடர் பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக இயற்கை விவசாயம், வனப்பொருட்கள் சேகரிப்பு வாயிலாக கிடைக்கும் வருவாயில் வாழ்கின்றனர். வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக ஈத்தக்குழி, கவர்கல் கிராமங்களை சேர்ந்த மக்கள், தற்காலிகமாக ஐயர்பாடி எஸ்டேட் ஜே.இ. பங்களா பகுதிக்கு இடம் பெயர்ந்து, கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். கடந்த, 2026ல் ஈத்தக்குழி சென்ற குடும்பங்களை, அங்கிருந்து வெளியேறி ஐயர்பாடி பகுதிக்கு செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். பல தலைமுறைகளாக  காடர் பழங்குடியினர் வாழ்ந்த பூர்வீக ஈத்தக்குழி வன கிராமத்தில் தொடர்ந்து குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் ஏதுவாக நில அளவை மற்றும் புவிசார் பதிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us