/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிளை நுாலகத்தை தரம் உயர்த்துங்க! வாசகர்கள் எதிர்பார்ப்பு
/
கிளை நுாலகத்தை தரம் உயர்த்துங்க! வாசகர்கள் எதிர்பார்ப்பு
கிளை நுாலகத்தை தரம் உயர்த்துங்க! வாசகர்கள் எதிர்பார்ப்பு
கிளை நுாலகத்தை தரம் உயர்த்துங்க! வாசகர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 21, 2025 08:17 PM

குடிமங்கலம்; பெதப்பம்பட்டி கிளை நுாலகத்துக்கு, கூடுதல் கட்டடம் கட்டி, தரம் உயர்த்த திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், கடந்த 1967ல், ஒன்றிய அலுவலகம் அருகில், கிளை நுாலகம் துவங்கப்பட்டது.
பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், வேலுார் உட்பட பகுதிகளில், அரசு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமல்லாது, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், அப்பகுதியில் ஒரே ஒரு கிளை நுாலகமாக பெதப்பம்பட்டி கிளை நுாலகம் மட்டுமே உள்ளது.
இதனால், கிராமப்புற பள்ளி மாணவர்கள், தொழிற்கல்வி மற்றும் கலைக்கல்வி படிக்கும் மாணவர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகவும், இதர தேவைகளுக்கும் நுாலக வசதி இல்லாமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உதாரணமாக, வீதம்பட்டி, வேலுார், வாகத்தொழுவு உட்பட கிராமங்களை சேர்ந்தவர்கள் நுாலகத்திற்காக 15 கி.மீ., வரை பயணிக்க வேண்டும். மூங்கில்தொழுவு, சிக்கனுாத்து, அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி உட்பட கிராம மக்களுக்கு இதே நிலை தான் காணப்படுகிறது.
தற்போதுள்ள கிளை நுாலக கட்டடத்தில், போதிய இடவசதியில்லை. புத்தகங்கள் வைக்கவும், வாசகர்கள் அமர்ந்து படிக்கவும், இடநெருக்கடியாக உள்ளது. பெதப்பம்பட்டி கிளை நுாலகத்தை தரம் உயர்த்தி, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
இது குறித்து அப்பகுதி வாசகர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.