தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நவீன தொழில்நுட்பங்களால் சமூகத்தை மேம்படுத்தணும்'

'நவீன தொழில்நுட்பங்களால் சமூகத்தை மேம்படுத்தணும்'

'நவீன தொழில்நுட்பங்களால் சமூகத்தை மேம்படுத்தணும்'


ADDED : அக் 26, 2025 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 10:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற,பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தா ர்.

அவர் பேசுகையில், ''மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உட்பட தற்கால தொழில்நுட்பங்களை நன்கு கற்று, சமூ கத்தைமேம்படுத்தவும், சமூகத்திற்கு நன்மை தரும் வகையிலும், ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும், '' என்றார்.

வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் ஆங்கில இலக்கிய துறைகளை சார்ந்த 271 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். பல்கலை அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகள் சவுமி,நவீனா, ஆஷிகா ஆகியோர் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

யுனைடெட் கல்வி குழுமத்தின் நிறுவனர் பொறியாளர் சண்முகம், நிர்வாக இயக்குநர் கைலாஷ் குமார், செயலாளர் அருண், கல்லுாரி முதல்வர் விஜயா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us