/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டிய வீட்டில் கைவரிசை மிளகாய் துாள் துாவி நுாதனம்
/
பூட்டிய வீட்டில் கைவரிசை மிளகாய் துாள் துாவி நுாதனம்
பூட்டிய வீட்டில் கைவரிசை மிளகாய் துாள் துாவி நுாதனம்
பூட்டிய வீட்டில் கைவரிசை மிளகாய் துாள் துாவி நுாதனம்
ADDED : பிப் 17, 2024 12:09 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய நபர்கள், மிளகாய், மல்லித்துாள், வரமிளகாய் துாவி சென்றதுடன், கண்காணிப்பு கேமராவின், 'டிவிஆர்' சாதனத்தை எடுத்துச் சென்றனர்.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, எம்.ஜி.எம்., நகரை சேர்ந்தவர் தனபாலன்,62. இவர், ராஜாமில் ரோட்டில், லாரி பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு திருப்பூரில் உறவினரின் திருமண விசேஷத்துக்கு சென்றார். இரவு, 8:00 மணிக்கு திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைத்து இருந்ததுடன், பீரோவில் இருந்த, ஏழு பவுன் நகை, 2 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீசார், கைவரிசை காட்டிய மர்மநபர்கள் குறித்து விசாரித்தனர். மேலும், வீட்டில் இருந்த ஒன்பது கண்காணிப்பு கேமராக்களின், 'டிவிஆர்' சாதனத்தையும் திருடிச் சென்றது தெரிந்தது.
போலீஸ் மோப்பநாய் கொண்டு கண்டறியாமல் இருக்க, வீட்டில் வரமிளகாய், மிளகாய் மற்றும் மல்லித்துாள் துாவி சென்றுள்ளனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.