/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் நிறுவனத்தில் ரூ. 3.60 லட்சம் மோசடி
/
தனியார் நிறுவனத்தில் ரூ. 3.60 லட்சம் மோசடி
ADDED : பிப் 22, 2024 05:27 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த, வஞ்சியாபுரத்தில் 'ரிலைன்ஸ் ரீடைல்ஸ்' எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, மண்டல மேலாளராக இருப்பவர் வெங்கடேஷ். இந்நிறுவனத்தில், செல்வரபுரத்தைச் சேர்ந்த ராகுல், 27, என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நிறுவனத்தில் தருவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் விற்பனை விபரத்தை வெங்கடேஷ் சரி பார்த்துள்ளார். அப்போது, குறைந்த அளவு பில்லிங் செய்து, அதிகளவு பொருட்களை விற்பனை செய்து, 3.60 லட்சம் மோசடி செய்திருப்பதைக் கண்டறிந்தார்.
அதன்பேரில், ராகுலிடம் கேள்வி எழுப்பியதற்கு மிரட்டல் விடுத்ததால், கோட்டூர் போலீசாரிடம் வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.