sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மானியம் வாங்கி கழிப்பறை கட்டுவதில்... காரமடை 'டாப்' மக்கள் ஆதரவால் அவகாசம் நீட்டிப்பு

/

 மானியம் வாங்கி கழிப்பறை கட்டுவதில்... காரமடை 'டாப்' மக்கள் ஆதரவால் அவகாசம் நீட்டிப்பு

 மானியம் வாங்கி கழிப்பறை கட்டுவதில்... காரமடை 'டாப்' மக்கள் ஆதரவால் அவகாசம் நீட்டிப்பு

 மானியம் வாங்கி கழிப்பறை கட்டுவதில்... காரமடை 'டாப்' மக்கள் ஆதரவால் அவகாசம் நீட்டிப்பு


ADDED : பிப் 08, 2026 05:08 AM

Google News

ADDED : பிப் 08, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை :கோவை மாவட்டத்தில், தனிநபர் கழிப்பறை கட்டித்தர கோரி விண்ணப்பித்து மானியத்தொகை பெற்றவர்களில், காரமடை ஒன்றியத்தை சேர்ந்தவர்களே முன்னிலையில் உள்ளனர். இத்திட்டத்தின் இலக்கு மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

துாய்மை பாரத இயக்கம் சார்பில், ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை அமைத்து தர, 12 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

ஊரக பகுதிகளில் வசிப்போர் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில், ஆய்வு செய்து, உரிய நபர்களின் வங்கி கணக்கு எண்ணுக்கு, இத்தொகை அனுப்பப்படுகிறது. கழிவறை கட்டி முடித்ததும் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கோவையில் உள்ள 12 ஒன்றியங்களில், 2020- 2026 (ஜனவரி வரை), 10,624 வீடுகளுக்கு, இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கழிப்பறை கட்டித்தர 483 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, துாய்மை பாரத திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், 'தனிநபர் கழிப்பறை திட்டத்தின் இலக்கு காலம், இவ்வாண்டுடன் முடிகிறது. மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காரமடை ஒன்றியத்தில் மட்டும், அதிகபட்சமாக 2,077 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

கழிப்பறை கட்ட இடவசதி இல்லாதவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 110 பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கோவில், பேருந்து நிலையம் போன்ற 19 இடங்கள், புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு விரைவில் பொது கழிப்பறை கட்டப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us