ADDED : பிப் 08, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
சூலூர்: சுல்தான்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்தவர் நாகராஜ், 21. மணவறை மற்றும் விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி, 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு கடத்தி சென்று,பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர், சூலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்ததில், சிறுமியை நாகராஜ் கடத்தி சென்றது தெரிந்தது. போலீசார் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர். விசாரணையில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரிந்தது. நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
