/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் 39 பேருக்கு லெப்டினன்ட் அங்கீகாரம் ஏ.என்.ஓ., சிறப்பு பயிற்சியில் உற்சாகம்
/
தமிழகத்தில் 39 பேருக்கு லெப்டினன்ட் அங்கீகாரம் ஏ.என்.ஓ., சிறப்பு பயிற்சியில் உற்சாகம்
தமிழகத்தில் 39 பேருக்கு லெப்டினன்ட் அங்கீகாரம் ஏ.என்.ஓ., சிறப்பு பயிற்சியில் உற்சாகம்
தமிழகத்தில் 39 பேருக்கு லெப்டினன்ட் அங்கீகாரம் ஏ.என்.ஓ., சிறப்பு பயிற்சியில் உற்சாகம்
ADDED : நவ 11, 2024 04:17 AM

கோவை : மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த, அசோசியேட் என்.சி.சி., அலுவலர்களுக்கான (ஏ.என்.ஓ.,) சிறப்பு பயிற்சியில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 39 பேருக்கு, லெப்டினன்ட் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கல்லுாரிகளில் இருக்கக் கூடிய என்.சி.சி., மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது, அணிவகுப்பு நடத்துவது, சிறப்பு முகாம்களுக்கு அழைத்து செல்வதற்கு என, ஏ.என்.ஓ., என அழைக்கப்படும் அசோசியேட் என்.சி.சி., அலுவலர் ஒருவர் இருப்பார்.
இவர்கள், மூன்று மாதங்கள், ராணுவ பயிற்சி எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. இவர்கள், கல்லுாரிகளில் நிரந்தர ஆசிரியராக இருக்க வேண்டும்; 45 வயதுக்குள், நல்ல உடல் தகுதியுடன், நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இவர்களுக்கு, சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு, ஒவ்வொரு கட்டமாக தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்பட்டனர்.
சிறப்பு பயிற்சி
இவர்களுக்கான சிறப்பு பயிற்சி, நடப்பாண்டு ஜூலை 29ம் தேதி துவங்கியது. ஆண்களுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பயிற்சி நடந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள கல்லுாரிகளில் இருந்து, அசோசியேட் என்.சி.சி., அலுவலர்கள் 430 பேர் பங்கேற்றனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி, கோவைக்கு உட்பட்ட கோவை என்.சி.சி., தலைமையகத்தில் இருந்து 14 பேர் என, தமிழகத்தில் இருந்து 39 பேர் பங்கேற்றனர். வயதுக்கு ஏற்றவாறு ஓட்டம், தண்டால், ஸ்பிரின்ட், சிட்-அப், ட்ரில், தேசிய ஒற்றுமை, நாட்டு நலன் என்பன உட்பட அம்சங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. துப்பாக்கி சுடுதல், மேப் ரீடிங் உட்பட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
2 ஸ்டார்
அக்., மாதம் 'பாஸ் ஆப் பரேடு' நடத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, லெப்டினன்ட் பதவிக்கான அங்கீகாரமாக, சீருடை தோள்பட்டையில் இரண்டு ஸ்டார்கள் அணிவிக்கப்பட்டது. கமாண்டர் மேஜர் ஜென்ரல் கபில் ஜீத் சிங் ரத்தோர், ஸ்டார்களை அணிவித்தார். தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 39 பேருக்கும் லெட்டினன்ட் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்தஸ்து பெற்றவர்கள், தங்கள் கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவர்.