/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு
/
கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு
கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு
கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில்... 92 சதவீதம் தேர்ச்சி!வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் இலக்கு
UPDATED : மே 10, 2024 10:41 PM
ADDED : மே 10, 2024 10:40 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்கள், 89 சதவீதம், மாணவியர், 95 சதவீதம் என, மொத்தம், 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி, கடந்த மாதம் நிறைவடைந்தது. தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, 74 அரசுப்பள்ளிகளில், 2,160 மாணவர்கள், 2,297 மாணவியர் என மொத்தம், 4,457 பேர் தேர்வு எழுதினர். அதில், 1,796 மாணவர்கள், 2,140 மாணவியர் என மொத்தம், 3,936 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 83 சதவீதமும், மாணவியர், 93 சதவீதம் என, அரசுப்பள்ளிகள் மொத்தம், 88 சதவீதம், தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
கல்வி மாவட்டத்தில் மொத்தம், 10 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அதில், 338 மாணவர்கள், 578 மாணவியர் என மொத்தம், 916 பேர் தேர்வெழுதினர். அவர்களில், மாணவர்கள், 314, மாணவியர், 564 என மொத்தம், 878 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 93 சதவீதம், மாணவியர், 98 சதவீதம் என, மொத்தம், 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நகராட்சி பள்ளிகள்
பொள்ளாச்சி நகராட்சியில், மூன்று பள்ளிகளில், மாணவர்கள், 181, மாணவியர், 123 பேர் தேர்வெழுதினர். அதில், 127 மாணவர்கள், 86 மாணவியர் என மொத்தம், 213 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், மாணவியர் தலா, 70 சதவீதம் என மொத்தம், 70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மெட்ரிக் பள்ளிகள்
கல்வி மாவட்டத்தில், 63 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அதில், 1,733 மாணவர்கள், 1,575 மாணவியர் என மொத்தம், 3,308 பேர் தேர்வெழுதினர். அதில், 1,674 மாணவர்கள், 1,563 மாணவியர் என மொத்தம், 3,237 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 97 சதவீதம், மாணவியர், 99 சதவீதம், என மொத்தம், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கல்வி மாவட்டம்
இத்தேர்வினை எழுத மாணவர்கள், 4,412, மாணவியர், 4,573 என மொத்தம், 8,985 பேர் விண்ணப்பித்தனர். அதில், மாணவர்கள், 3,911, மாணவியர், 4,353 என மொத்தம், 8,264 பேர் தேர்வெழுதினர். மாணவர்கள், 501, மாணவியர், 220 என மொத்தம், 721 பேர் தேர்ச்சி பெறவில்லை.
அதில், மாணவர்கள், 89 சதவீதம், மாணவியர், 95 சதவீதம் என மொத்தம், 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி சதவீதமே அதிகரித்து காணப்பட்டது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளோம். தொடர்ந்து பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகள், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது.
கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம், 56 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. வரும் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைய முயற்சிகள் எடுக்கப்படும்,' என்றனர்.