/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்த்திகை மாத துவக்கத்தில் மல்லிகை, முல்லை விலை உயர்வு
/
கார்த்திகை மாத துவக்கத்தில் மல்லிகை, முல்லை விலை உயர்வு
கார்த்திகை மாத துவக்கத்தில் மல்லிகை, முல்லை விலை உயர்வு
கார்த்திகை மாத துவக்கத்தில் மல்லிகை, முல்லை விலை உயர்வு
ADDED : நவ 17, 2024 10:26 PM

கோவை; கோவையில் கார்த்திகை மாத துவக்கம் மற்றும் முகூர்த்தம் முன்னிட்டு மல்லிகை, முல்லை ஆகிய பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
கோவைக்கு சத்தியமங்கலம், காரமடை, நிலக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளன. மழை காரணமாக மல்லிகை, முல்லை விலை அதிகரித்துள்ளது. பிற பூக்கள் வழக்கமான விலைக்கே விற்பனையானது.
கோவை பூமார்கெட்டில் நேற்று செவ்வந்தி கிலோ 160 ரூபாய்க்கும், செண்டுமல்லி கிலோ 60 ரூபாய்க்கும், சம்மங்கி கிலோ 80 ரூபாய்க்கும், ரோஸ் கட்டு 200 ரூபாய்க்கும், தாமரை ஒன்று பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் ஐயப்பன் கூறுகையில், '' கார்த்திகை தினத்தன்று மல்லிகை 2000 முதல் 2400 ரூபாய் வரைக்கும், முல்லை 800-1000 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
முகூர்த்த நாளான நேற்று மல்லிகை 1600 ரூபாய்க்கும், முல்லை 800 ரூபாய்க்கும் விற்பனையானது. பிற பூக்கள் பெரிதளவில் விலை ஏற்றம் என்பது இல்லை.
மழை காரணமாக அரும்புகள் பாதிக்கப்பட்டதால், மல்லிகை, முல்லை விலை அதிகரித்துள்ளது. மீண்டும் அரும்புகள் வந்துவிட்டால், ஒரு வாரத்தில் விலை மாறிவிடும்,'' என்றார்.